என்னை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்... நான் எந்த ஒரு காரெக்டரை விரும்பி ரசிக்கிறேனோ அதுபோலவே சில நிமிடங்கள் மாறி விடுவேன்... உதாரணமாக எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்..அதிலும் இலங்கை கிரிக்கெட் அணியை ரொம்ப பிடிக்கும்.. கிரிக்கெட் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு கிரிக்கெட் வீரனாகவே மாறிவிடுவேன்.. இலங்கை அணி வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அதே நேரம் இலங்கை அணி தோற்றால் நான் இலங்கை அணியில் இணைந்து வெற்றியை தேடிக்கொடுப்பதாக கற்பனை காண்பேன்... இதுபோல எந்த ஒரு விடயம் என்னை கவர்ந்தாலும் அது போலவே மாறி விடுகிறேன்...இந்த நிலைமை தான் எல்லாதிலும் பாடல் ஒன்றை கேட்கும் போது பாடகராகவும் கவிதை ஒன்றை பார்க்கும் போது கவிஞராகவும் பாடல் ஒன்றை பார்க்கும் போது டான்ஸ்ரராகவும் கதை ஒன்றை வாசிக்கும் போது கதாசிரியராகவும் திரைப்படம் ஒன்றை பார்க்கும் போது நடிகராகவும் என்னை நானே கற்பனை செய்து கொள்கிறேன். இப்படி எல்லாம் செய்யும் போது எனக்கு தெரியாமலே எனக்குள் ஒரு புதுத்திறமை உருவாகிறது.. இதற்குள் ஒரு திறமையை நான் வளர்த்துக்கொள்ளும் போது நிச்சயமாக சிறந்த எதிர்காலம் நிச்சயம் எனக்கு உண்டு.
No comments:
Post a Comment