SUMI PICTURE

SUMI PICTURE
SUMI

Wednesday, February 22, 2012

என்னை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா?

என்னை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா? இதோ சொல்கிறேன் கேளுங்கள்... நான் எந்த ஒரு காரெக்டரை விரும்பி ரசிக்கிறேனோ அதுபோலவே சில நிமிடங்கள் மாறி விடுவேன்... உதாரணமாக எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்..அதிலும் இலங்கை கிரிக்கெட் அணியை ரொம்ப பிடிக்கும்.. கிரிக்கெட் பார்த்து கொண்டிருக்கும் போது நானும் ஒரு கிரிக்கெட் வீரனாகவே மாறிவிடுவேன்.. இலங்கை அணி வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. அதே நேரம் இலங்கை அணி தோற்றால் நான் இலங்கை அணியில் இணைந்து வெற்றியை தேடிக்கொடுப்பதாக கற்பனை காண்பேன்... இதுபோல எந்த ஒரு விடயம் என்னை கவர்ந்தாலும் அது போலவே மாறி விடுகிறேன்...இந்த நிலைமை தான் எல்லாதிலும் பாடல் ஒன்றை கேட்கும் போது பாடகராகவும் கவிதை ஒன்றை பார்க்கும் போது கவிஞராகவும் பாடல் ஒன்றை பார்க்கும் போது டான்ஸ்ரராகவும் கதை ஒன்றை வாசிக்கும் போது கதாசிரியராகவும் திரைப்படம் ஒன்றை பார்க்கும் போது நடிகராகவும் என்னை நானே கற்பனை செய்து கொள்கிறேன். இப்படி எல்லாம் செய்யும் போது எனக்கு தெரியாமலே எனக்குள் ஒரு புதுத்திறமை உருவாகிறது.. இதற்குள் ஒரு திறமையை நான் வளர்த்துக்கொள்ளும் போது நிச்சயமாக சிறந்த எதிர்காலம் நிச்சயம் எனக்கு உண்டு. 

வவுனியா


வந்தாரை வாழ வைக்கும் வவுனியா மண்ணே
என்றுமே நீதான் எம் சொந்த மண்ணே
கலகல கலகல கல என சிறுவர்கள்
பட பட பட படவென பெரியவர்கள்
சல சல சல வென குளங்கள்
தள தள தள வென பெண்கள்
பார்ப்பதற்கே வினோதமாக இருக்கும்
காலை விடிந்ததும் கோவில் மணியோசை
பள்ளி செல்லும் மாணவர்
அவசர அவசரமாக வேலை செல்லும் பெரியோர்
வெட்டியாக இருந்தாலும் காதலியை கரைக்ட் பண்ணுவதற்காக வெளிக்கிட்டு றோட்டில் நிற்கும் ஆண்கள்
தங்களை பார்ப்பதற்காக தான் றோட்டில் நிற்கிறார்கள் என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் செல்லும் பெண்கள்..  இப்படிவழமை போல் வவுனியா நகரம் ......பார்பதற்கே அழகாக இருந்தது..

Wednesday, February 15, 2012

சண்டை

உன்னுடன்
சண்டை பிடிக்கும் 
ஒவ்வொரு தருணங்களிலும் 
உணர்கிறேன் 
நீ எனக்கு 
உரித்தானவள் என்று

My Song Lyrics


கொட்டு மழை சாரலிலே
குடை கொண்டு வந்தவளே
குற்றம் இல்லா நெஞ்சினிலே
குடியமர்ந்து சென்றவளே

நீதான் உயிரே நீதான்
நீதான் உயிரே நீதான்