எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனப்பாங்கு இல்ல... கிறுக்குதனமா ஏதாவது ஒண்ணு பண்ணிக்கிட்டு இருப்பேன்... அதற்காக நண்பர்களிடம் பல தடவை திட்டும் சில வேளைகளில் அடியும் வாங்கியிருக்கிறேன்... அதே போல்வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது என்றும் தெரியாமல் மற்றவர்களை கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பேன். இதற்காகவும் நண்பர்களுடன் அடிக்கடி முரண்பட்டிருக்கிறேன். என்னதான் நடந்தாலும் அடுத்த நாள் வழமை போல நண்பர்களுடன் எனது அரட்டை தொடங்கும். இப்படியே என் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அப்போது நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்..
நான் படித்த பாடசாலையை பற்றி உங்களுக்கு நான் கட்டாயம் சொல்லியே ஆகணும். என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மட்டுமல்ல என் மூச்சுடனே கலந்து விட்டது. நான் போர்ச்சூழல் காரணமாக யாழப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை கப்பலில் வந்து பஸ் ஒன்றினூடாக வவுனியா வந்து சேர்ந்தோம்.
No comments:
Post a Comment